மீண்டும் அந்த நடிகருடன் இணைந்த பிரியங்கா மோகன்.. இது சூப்பர்ஹிட் ஜோடியாச்சே!
கன்னடத்தில் அறிமுகமாகி பின் தெலுங்கில் வெளிவந்த கேங் லீடர் படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமானவர் நடிகை பிரியங்கா மோகன்.
இதன்பின் தமிழில் என்ட்ரி கொடுத்த இவர் சிவகார்த்திகேயனின் டாக்டர், டான் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் போன்ற முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து வந்தார்.
மேலும் தற்போது தனுஷுடன் இணைந்து கேப்டன் மில்லர், பவன் கல்யாணுடன் OG, ஜெயம் ரவியுடன் பிரதர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், பிரியங்கா மோகன் புதிதாக கமிட்டாகியுள்ள படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விவேக் அத்ரயா இயக்கத்தில் தெலுங்கு நடிகர் நாணி நடிப்பில் உருவாகும் அவருடைய 31வது படத்தில் பிரியங்கா மோகன் தான் கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.இதற்காக அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே நாணி நடிப்பில் வெளிவந்த கேங் லீடர் படம் தான் பிரியங்கா மோகனுக்கு முதல் வெற்றியை தேடி கொடுத்தது.
இதனால் ஹிட் ஜோடியை மீண்டும் திரையில் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். நாணி 31 படத்தின் படப்பிடிப்பு வருகிற 24ஆம் தேதி முதல் துவங்கவுள்ளதாக கூறப்படுகிறது.