அது ரொம்ப கஷ்டம்.. ரஜினி அப்படி இருப்பார் என எதிர்பார்க்கவேயில்லை: தமன்னா.
ரஜினியின் ஜெயிலர் படத்தில் கவாலா பாடல் மிகப்பெரிய ஹிட் ஆனது. குறிப்பாக தமன்னாவின் டான்ஸ் பெரிய அளவில் பேசப்பட்டது.
அந்த பாடலில் ரஜினி சில நொடிகள் மட்டும் தான் தோன்றி இருப்பார். தமன்னாவிடம் சரியாக பேச கூட முடியவில்லை என ரஜினியே இசை வெளியீட்டு விழாவில் பேசி இருந்தார்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் ரஜினி பற்றி பேசிய தமன்னா, "நான் பார்த்தத்திலேயே அதிகம் humble ஆனவர் ரஜினி தான்."
"அவர் இந்த அளவுக்கு உயரத்தில் இருந்தும் அதே அளவு எளிமையாக இருக்கிறார். இந்த இரண்டும் ஒரே நபரிடம் இருப்பது மிககடினம். அவர் அப்படி இருப்பார் என எதிர்பார்க்கவே இல்லை" என தமன்னா கூறி இருக்கிறார்.