பிக்பாஸில் தலைகுனிந்த மகள் ஜோவிகாவிற்கு தந்தை ஆகாஷ் அனுப்பிய காட்சி.

பிக்பாஸில் தலைகுனிந்த மகள் ஜோவிகாவிற்கு தந்தை ஆகாஷ் அனுப்பிய காட்சி.

பிக் பாஸில் படிப்பு பிரச்சினை காரணமாக தலைகுனிந்த ஜோவிகாவிற்கு அவரது தந்தை காணொளி ஒன்றினை அனுப்பியுள்ளது வைரலாகி வருகின்றது.

பிரபல ரிவியில் கடந்த ஞாயிற்று கிழமை ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இதன் தொகுப்பாளராக இந்த ஆண்டும் கமல்ஹாசனே இருந்து வருகின்றார். உள்ளே சென்ற முதல் நாளே 6 போட்டியாளர்கள் வேறு வீட்டிற்கு அனுப்பப்பட்டனர்.

ஆரம்பித்த முதல் நாளிலிருந்தே சண்டையும், சச்சரவுமாக செல்லும் பிக்பாஸில் கடந்த நாளில் ஜோவிகாவின் படிப்பு விடயம் பரபரப்பாக பேசப்பட்டது.

ஆம் ஜோவிகா பள்ளிப்படிப்பைக் கூட முடிக்கவில்லை என்பதால், பலரும் அவருடைய எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அறிவுரை கூறினர். ஆனால் விசித்ரா ஒருபடி மேலே சென்று கேள்வி கேட்டது வாக்குவாதத்தில் கொண்டு சென்றது.

பிக்பாஸில் தலைகுனிந்த மகள் ஜோவிகாவிற்கு தந்தை ஆகாஷ் அனுப்பிய காட்சி | Aakash Send Jovika Tamil Video Vanitha Releasedநேற்றைய தினத்தில் கமல்ஹாசன் ஜோவிகாவின் படிப்பைக் குறித்து பட்டும் படாமலும் மேலோட்டமாக பேசி முடித்துச் சென்றுள்ளார்.

கடந்த நாளில் விசித்ரா தமிழ் எழுத தெரியுமா டி என்று ஜோவிகாவை கேட்டார். அதற்கு அவர் எனக்கு அப்பா - அம்மா எழுத தெரியும், தமிழில் கொஞ்சம் படிக்க தெரியும் என்று பதில் அளித்தார்.

இந்நிலையில் ஜோவிகாவின் தந்தை ஆகாஷ் வனிதாவிற்கு அனுப்பி காணொளியை வனிதா வெளியிட்டுள்ளார்.

இதில் ஜோவிகா தமிழில் கவிதை ஒன்றை சரளமாக வாசித்துக் காட்டியுள்ளார். குறித்த காட்சியை அவதானித்த ரசிகர்கள் மகள் அசிங்கப்பட்டாள் என்றதும் தந்தை ஆகாஷ் களத்தில் இறங்கிவிட்டார் என்று கூறி வருகின்றனர்.

LATEST News

Trending News