மிஸ்கின் பேசுவதை நான் என்ஜாய் பண்ணுவேன்…. ‘டிராகன்’ விழாவில் பிரதீப் ரங்கநாதன்!

மிஸ்கின் பேசுவதை நான் என்ஜாய் பண்ணுவேன்…. ‘டிராகன்’ விழாவில் பிரதீப் ரங்கநாதன்!

டிராகன் பட விழாவில் பிரதீப் ரங்கநாதன், மிஸ்கின் குறித்து பேசி உள்ளார்.மிஸ்கின் பேசுவதை நான் என்ஜாய் பண்ணுவேன்.... 'டிராகன்' விழாவில் பிரதீப் ரங்கநாதன்!பிரதீப் ரங்கநாதன் லவ் டுடே படத்தின் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானவர். அதைத் தொடர்ந்து தற்போது டிராகன் எனும் திரைப்படத்திலும் அவர் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க அஸ்வத் மாரிமுத்து இயக்கியுள்ளார். வருகின்ற பிப்ரவரி 21ஆம் தேதி படம் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.மிஸ்கின் பேசுவதை நான் என்ஜாய் பண்ணுவேன்.... 'டிராகன்' விழாவில் பிரதீப் ரங்கநாதன்!அந்த நிகழ்ச்சியில் பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் மாரிமுத்து, மிஷ்கின், விக்னேஷ் சிவன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் பேசிய பிரதீப் ரங்கநாதன், மிஸ்கின் பேசுவதை நான் என்ஜாய் பண்ணுவேன் என்று கூறியுள்ளார். அதன்படி அவர் பேசியதாவது, “உங்களில் ஒருவனாக இங்கே என்னை நிற்க வைத்ததற்கு நன்றி. இப்போது ஏஜிஎஸ் நிறுவனம் என்றால் ப்ரொபஷனல் -ஐ தாண்டி பெர்சனல் ஆனது. என் மீது ஏஜிஎஸ் நிறுவனம் வைத்த நம்பிக்கைக்கு நன்றி. மிஷ்கின் தினமும் எனக்கு ஒரு கிப்ட் தருவார். அவர் பேசுவது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கலாம். ஆனால் நான் அதை என்ஜாய் பண்ணுவேன். அவருடன் நடித்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.மிஸ்கின் பேசுவதை நான் என்ஜாய் பண்ணுவேன்.... 'டிராகன்' விழாவில் பிரதீப் ரங்கநாதன்!அடுத்தது இந்த படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் ஹீரோ மாதிரி இருப்பார். மாஸ், கிளாஸ் இரண்டுமே கௌதம் மேனன் சார் தான். கே எஸ் ரவிக்குமார் எனக்கு அப்பா மாதிரி. இந்த படத்தில் நிறைய கேமியோ ரோல்கள் இருக்கிறது. தமிழ் சினிமாவில் உள்ள சிறந்த பாடல் ஆசிரியர்களில் விக்னேஷ் சிவனும் ஒருவர்.

 

சிலர் என்னை அடிக்கவும் செய்கிறார்கள். பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். ஒரு செடி வளரும்போது அதை பிச்சி போடுவார்கள், பறித்து விடுவார்கள். ஆனால் அது மரமாக வளரும்போது சந்தோஷமாக இருக்கும். அதை போல் தான் இந்த சில எதிர்மறையான விமர்சனங்களை கடந்து விட்டால் நிச்சயமாக வெற்றி கிடைக்கும்” என்று பேசியுள்ளார்.

LATEST News

Trending News