பெரிய ரிஸ்க் எடுக்கும் சிவகார்த்திகேயன்! அயலான் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
சிவகார்த்திகேயன் நடிப்பில் நீண்ட காலமாக கிடப்பில் இருக்கும் படம் அயலான். ரவிக்குமார் இயக்கி வரும் அந்த படம் குழந்தைகளை அதிகம் கவரும் வகையில் வேற்று கிரக வாசிகள் வருவது போல கதை இருக்கிறது.
பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் அயலான் படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்று தான் ரசிகர்கள் காத்திருந்தனர்.
இந்நிலையில் அடுத்த வருடம் பொங்கலுக்கு அயலான் ரிலீஸ் ஆகும் என அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கின்றனர்.
பொங்கலுக்கு விக்ரமின் தங்கலான் மற்றும் பிரபாஸின் கல்கி ஆகிய படங்கள் ரிலீஸ் ஆவது குறிப்பிடத்தக்கது. கல்கி படத்தில் கமல்ஹாசன் தான் வில்லனாக நடித்து இருக்கிறார்.
அதனால் அயலான் படத்திற்கு பெரிய போட்டி இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.