ரஜினியை அடுத்து ரிஷிகேஷ் சென்ற ரம்யா பாண்டியன்... வைரல் புகைப்படங்கள்..!

ரஜினியை அடுத்து ரிஷிகேஷ் சென்ற ரம்யா பாண்டியன்... வைரல் புகைப்படங்கள்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இமயமலை மற்றும் ரிஷிகேஷ் சென்று திரும்பிய நிலையில், தற்போது அதே பகுதிக்கு நடிகை ரம்யா பாண்டியன் சென்றுள்ள புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரை உலகின் நடிகை மற்றும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான ரம்யா பாண்டியன், அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யும் புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகும்.

அந்த வகையில் தற்போது அவர் ரிஷிகேஷ் சென்றுள்ள நிலையில் அங்கிருந்து பதிவு செய்துள்ள புகைப்படங்கள், வீடியோக்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த பதிவில் அவர் ’தெய்வ பூமி என்று அழைக்கப்படும் ரிஷிகேஷில் 21 நாட்கள் இருந்தது மறக்க முடியாதது. என் இதயத்தில் அப்படியே இந்த இடங்கள் எல்லாம் பதிந்து உள்ளது. ஆசிரமத்திற்கு அருகில் இருக்கும் சிவன் கோயில் செல்லும் வழியில் ஓடும் கங்கை நதியை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி. எனது இதயபூர்வமான பிரார்த்தனைகளை செய்ததோடு, கங்கையின் வழியே ஒரு அமைதியான நடைபயணம் அதிகாலையில் செய்தேன்.

ஒவ்வொரு நாளும் ஒரு புதிய அனுபவத்தை கற்றுக் கொண்டேன். நல்ல உணவு, மயக்கும் கங்கை நதி, அலங்கரிக்கப்பட்ட மாலைகள், இயற்கையான அமைதி ஆகிய அனுபவங்கள் எனக்கு கிடைத்தது. இந்த நேர்மறை மற்றும் அமைதியான நிலத்திற்கு விரைவில் திரும்புவேன் என்று நம்புகிறேன்’ என்று பதிவு செய்துள்ளார்

ரம்யா பாண்டியனின் இந்த பதிவுகள் மற்றும் அவர் பதிவு செய்த புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

LATEST News

Trending News

HOT GALLERIES