15 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட பாடல்.. இணையத்தில் லீக் ஆனதால் ஷங்கர் அதிர்ச்சி..!
ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தில் 15 கோடி ரூபாய் செலவில் ஒரு பாடல் காட்சி எடுக்கப்பட்ட நிலையில் அந்த பாடல் கட்சியின் சில பகுதிகள் இணையத்தில் லீக் ஆகி உள்ளதை அடுத்து ஷங்கர் உட்பட படக்குழுவினர் அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுவது.
ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’கேம் சேஞ்சர்’. ராம்சரண் தேஜா முக்கிய வேடத்தில் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தில் இடம்பெற்ற பாடல் காட்சி ஒன்றின் படப்பிடிப்பு நடைபெற்றது. ரூ.15 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட இந்த பாடல் காட்சிகளின் சில பகுதிகள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது படக்குழுவினர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் லீக் ஆன காட்சிகள் ரிகர்சல் செய்த போது எடுக்கப்பட்டது தான் என்றும் ஒரிஜினல் காட்சி இல்லை என்றும் கூறப்படுகிறது.
இருப்பினும் ஒரு பாடல் காட்சியின் பெரும்பாலான பகுதி லீக் ஆகி இருப்பதை அடுத்து அடுத்த கட்ட படப்பிடிப்பில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை ’கேம் சேஞ்சர்’ படக்குழுவினர் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
தில் ராஜூ தயாரிப்பில் உருவாகி வரும் ’கேம் சேஞ்சர்’ படத்தில் ராம்சரண் தேஜா, கியாரா அத்வானி, அஞ்சலி, சமுத்திரகனி, எஸ்ஜே சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கார்த்திக் சுப்புராஜ் கதையில் உருவாகி வரும் இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். திருநாவுக்கரசு ஒளிப்பதிவில் சமீர் முகமது படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.