நான் ரெடி தான்.. Pan இந்தியா ஹீரோவுக்கு ஓகே சொன்ன அனிருத்.

நான் ரெடி தான்.. Pan இந்தியா ஹீரோவுக்கு ஓகே சொன்ன அனிருத்.

தற்போது அனிருத் தான் தமிழ் சினிமாவில் டாப் இசையமைப்பாளர் என சொல்லும் அளவுக்கு எக்கச்சக்க ஹிட் கொடுத்து வருகிறார். சமீபத்தில் ரிலீஸ் ஆன ஜவான் படத்தின் பாடல்களுக்கும் பெரிய ரெஸ்பான்ஸ் கிடைத்து இருக்கிறது.

மேலும் அடுத்து பல டாப் ஹீரோ படங்களையும் கைவசம் வைத்து இருக்கிறார். லியோ, இந்தியன் 2, தலைவர் 171, விடாமுயற்சி என பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

நான் ரெடி தான்.. Pan இந்தியா ஹீரோவுக்கு ஓகே சொன்ன அனிருத் | Allu Arjun Wants To Team Up With Anirudh

இந்நிலையில் நடிகர் அல்லு அர்ஜுன் ட்விட்டரில் ஜவான் படத்தை பாராட்டி இருக்கிறார். அனிருத் பாடல்களை நாடே தற்போது loopல் கேட்டுக் கொண்டிருக்கிறது என கூறி இருக்கிறார். அந்த ட்விட்டுக்கு அனிருத் நன்றி கூறி இருக்கிறார்.

''வெறும் நன்றி மட்டும் பத்தாது.. எனக்கும் இப்படி சிறந்த பாடல்கள் வேண்டும்" என அல்லு அர்ஜுன் கேட்டிருக்கிறார்.

அதற்கு 'ரெடி' என அனிருத் பதிலளித்து இருப்பதால், இந்த கூட்டணி விரைவில் இணைய வாய்ப்பிருக்கிறது. 

LATEST News

Trending News

HOT GALLERIES