'கேஜிஎப்' யாஷ் அடுத்த படத்தை இயக்குவது நடிகையா? ஆச்சரிய தகவல்..!

'கேஜிஎப்' யாஷ் அடுத்த படத்தை இயக்குவது நடிகையா? ஆச்சரிய தகவல்..!

பிரபல கன்னட நடிகர் யாஷ் நடித்த ’கேஜிஎஃப்’ மற்றும் ’கேஜிஎஃப் 2’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் குறிப்பாக ’கேஜிஎஃப் 2’ திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை செய்தது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் யாஷ் நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது யாஷ் அடுத்த படத்தை இயக்குவது நடிகை என்பது தெரியவந்துள்ளது. 

நடிகை மற்றும் இயக்குனரான கீத்து மோகன் தாஸ் என்பவர் தான் யாஷ் நடிக்கும் அடுத்த படத்தை அதாவது ’யாஷ் 19’ படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

தமிழில் வெளியான ’என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு’ ’நளதமயந்தி’ ’பொய்’ ஆகிய படங்களில் நடித்தவரும் மூன்று படங்களை இயக்கியவருமான கீத்து மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாக உள்ள அடுத்த படத்தில் யாஷ் முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கீத்து மோகன்தாஸ் இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு நிவின் பாலி நடித்த ’மூத்தோன்’ என்ற மலையாள திரைப்படம் வெளியானது. இந்த படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது நான்கு ஆண்டுகள் கழித்து அவர் யாஷ் படத்தை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News