தளபதி 68 விஜய்க்கு ஜோடி சினேகா தான்.. புகைப்படத்தை வெளியிட்டு உறுதி செய்த வெங்கட் பிரபு.

தளபதி 68 விஜய்க்கு ஜோடி சினேகா தான்.. புகைப்படத்தை வெளியிட்டு உறுதி செய்த வெங்கட் பிரபு.

தளபதி விஜய் - வெங்கட் பிரபு இயக்கத்தில் முதல் முறையாக உருவாகவுள்ள படம் தளபதி 68. ஏ ஜி எஸ் நிருவனம் இப்படத்தை தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

தளபதி 68 விஜய்க்கு ஜோடி சினேகா தான்.. புகைப்படத்தை வெளியிட்டு உறுதி செய்த வெங்கட் பிரபு | Thalapathy 68 Sneha On Board Confrom By Venkat

இப்படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதற்காக தான் விஜய், வெங்கட் பிரபு சமீபத்தில் வெளிநாட்டிற்கு கூட சென்று இருந்தனர்.

இப்படத்தில் விஜய்யுடன் பிரியங்கா மோகன், பிரஷாந்த், பிரபு தேவா, சினேகா உள்ளிட்டோர் நடிப்பதாக தகவல் வெளிவந்தது. ஆனால், இதுகுறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை.

இந்நிலையில், தளபதி 68ல் சினேகா நடிப்பதை உறுதி செய்யும் விதமாக சினேகா மற்றும் இயக்குனர் வெங்கட் பிரபு இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. முதலில் இது தளபதி 68 படத்திற்காக என்று தான் அனைவரும் நினைத்தனர்.

தளபதி 68 விஜய்க்கு ஜோடி சினேகா தான்.. புகைப்படத்தை வெளியிட்டு உறுதி செய்த வெங்கட் பிரபு | Thalapathy 68 Sneha On Board Confrom By Venkat

ஆனால், இது தளபதி 68 படத்திற்காக கிடையாது, சினேகா மற்றும் வெங்கட் பிரபு இருவரும் இணைந்து நடிக்கும் ஷாட் பூட் த்ரீ படத்தின் படப்பிடிப்பில் இருந்து எடுக்கப்பது என்பது பின் தான் தெரியவந்துள்ளது.

LATEST News

Trending News

HOT GALLERIES