கங்கனா ஒரிஜினல் சந்திரமுகி.. ஆனால் ஜோதிகா அப்படியில்லை.. ராகவா லாரன்ஸ்..!
’சந்திரமுகி 2’ படத்தில் கங்கனா ஒரிஜினல் சந்திரமுகி கேரக்டரில் நடித்துள்ளார் என்றும் ஆனால் சந்திரமுகி முதல் பாகத்தில் ஜோதிகா சந்திரமுகியாக தன்னை நினைத்துக் கொண்டு நடித்திருந்தார் என்று ராகவா லாரன்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.
ராகவா லாரன்ஸ் நடிப்பில் பி வாசு இயக்கத்தில், எம்.எம்.கீரவாணி இசையில் உருவாகியுள்ள ’சந்திரமுகி 2’ திரைப்படம் வரும் 15ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் பிரமாண்டமாக நடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ’சந்திரமுகி 2’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில் ’ஜோதிகா மற்றும் கங்கனா சந்திரமுகி கேரக்டர்களில் நடித்தது குறித்து ராகவா லாரன்ஸ் விளக்கம் அளித்தார். அதில், ‘எல்லோரும் ஜோதிகா மேடம் மாதிரியே கங்கனா நடித்துள்ளார் என்று கேட்கிறார்கள். ஆனால் ஜோதிகாவையும், கங்கனாவையும் ஒப்பிடக்கூடாது. ஏனெனில் ஜோதிகா மேடம் தன்னை சந்திரமுகியாக நினைத்து நடித்துள்ளார், ஆனால் கங்கனா ஒரிஜினல் சந்திரமுகி கேரக்டரில் நடித்துள்ளார் என்று தெரிவித்தார்
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா, வடிவேலு, ராதிகா, லட்சுமி மேனன், ஸ்ருஷ்டி, மஹிமா நம்பியார், ரவி மரியா, சுரேஷ் மேனன், ஆர்.எஸ்.சிவாஜி, ஒய்ஜி மகேந்திரா, மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதில் மனோபாலா மற்றும் ஆர்.எஸ்.சிவாஜி தற்போது உயிருடன் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
லைகா நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில், ஆர் ஜி ராஜசேகர் ஒளிப்பதிவில், தோட்டா தரணி கலை இயக்கத்தில் இந்த படம் உருவாகியுள்ளது.