மது பாட்டில் உடன் நடிகை அமலா பால்.. சர்ச்சையில் சிக்கிய புகைப்படம்..!
ஒரு காலகட்டத்தில் தொடர்ந்து பல படங்களில் நடித்து இன்று பெரிதும் பட வாய்ப்புகள் இல்லாமல் பல நடிகர், நடிகைகள் உள்ளனர். அதில் ஒருவர் தான் அமலா பால்.
இவர் விஜய், விக்ரம், தனுஷ் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். மேலும் சோலோ ஹீரோயினாகவும் நடித்து இருக்கிறார். ஆனால், தற்போது இவருக்கு பெரிதும் தமிழில் பட வாய்ப்புகள் இல்லை.
இவர் நடிப்பில் கடைசியாக ஹிந்தியில் போலா எனும் படம் வெளிவந்தது. இதை தொடர்ந்து தற்போது மலையாளத்தில் சில படங்களில் நடித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர். இவர் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்கள் உடனடியாக இணையத்தில் வைரலாகும்.
ஆனால், தற்போது மது பாட்டில் உடன் கடற்கரையில் அமர்ந்து இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. சர்ச்சைக்குரிய இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது.