மாலத்தீவில் விடுமுறையை கழிக்கும் தமன்னா.. வேற லெவல் புகைப்படங்கள்..!

மாலத்தீவில் விடுமுறையை கழிக்கும் தமன்னா.. வேற லெவல் புகைப்படங்கள்..!

நடிகை தமன்னா சமீபத்தில் விடுமுறையை கழிக்க வெளிநாடு சென்றார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது அவர் மாலத்தீவு சென்றுள்ளது தெரியவந்துள்ளது.

நடிகை தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாலத்தீவில் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். அழகிய கடற்கரை மற்றும் வானவில் பின்னணியில் இருக்கும் தமன்னா புகைப்படம் உட்பட வேற லெவல் புகைப்படங்களை அவர் பதிவு செய்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் பதிவு செய்த ஒரு சில மணி நேரத்தில் 9 லட்சத்துக்கும் அதிகமான லைக், ஆயிரக்கணக்கான கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது என்று குறிப்பிடத்தக்கது. 

நடிகை தமன்னா தனது காதலருடன் வெளிநாடு சென்றார் என்று கூறப்பட்டாலும் அவர் இன்ஸ்டாவில் பதிவு செய்த புகைப்படத்தில் அவரது காதலர் விஜய் வர்மா இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை தமன்னா நடிப்பில் உருவான Aakhri Sach என்ற வெப் தொடர் சமீபத்தில் ஹாட்ஸ்டாரில் வெளியான நிலையில் தற்போது அவர் ’அரண்மனை 4’ உள்பட 3 படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES