பாலி தீவு அருவியில் ஆனந்த குளியல்.. பொன்னியின் செல்வன் நடிகை..!

பாலி தீவு அருவியில் ஆனந்த குளியல்.. பொன்னியின் செல்வன் நடிகை..!

மணிரத்னம் இயக்கிய ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் பூங்குழலி என்ற கேரக்டரில் நடித்த ஐஸ்வர்யா லட்சுமி, பாலி தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள நிலையில் அங்குள்ள அருவியில் ஆனந்த குளியல் போட்ட வீடியோவை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. ’

விஷால் நடித்த ’ஆக்சன்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. அதன் பிறகு தனுஷின் ’ஜகமே தந்திரம்’ திரைப்படத்தில் நடித்த அவர் ’பொன்னின் செல்வன்’ படத்தில் பூங்குழலி என்ற கேரக்டரின் மூலம் பிரபலமானார். அதுமட்டுமின்றி விஷ்ணு விஷாலுடன் ’கட்டா குஸ்தி’ என்ற திரைப்படத்தில் நடித்தார் என்பதும் அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி சமீபத்தில் தனது தோழிகளுடன் பாலி தீவுக்கு சுற்றுலா சென்ற நிலையில் அங்கிருந்தபடியே எடுத்த இயற்கை எழில் கொஞ்சம் காட்சிகளின் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். அதில் அவர் அங்குள்ள அருவியில் ஆனந்தமாக குளியல் போடும் வீடியோவையும் வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோவுக்கு ஏராளமான கமெண்ட்கள் குவிந்து வருகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES