பிரபாஸ் அடுத்த படத்தில் 'தங்கலான்' நடிகை..!
விக்ரம் நடிப்பில், பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தங்கலான்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகை மாளவிகா மோகனன், பிரபாஸ் நடிக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ஹைதராபாத் சென்றுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன
பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குனர் மாருதி இயக்கத்தில் உருவாகும் ஒரு படத்தில் பிரபாஸ் உடன் நடிக்க மாளவிகா மோகன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். மேலும் இந்த படத்தில் நிதி அகர்வால் மற்றும் ரித்தி குமார் ஆகியோர்களும் நாயகியாக நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகை மாளவிகா மோகன் ஹைதராபாத் செல்லும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு செய்துள்ளார். அதில் ’ஹலோ ஹைதராபாத்’ என்று அவர் கேப்ஷன் ஆக பதிவு செய்துள்ள நிலையில் இந்த பதிவுக்கு லைக் குவிந்து வருகிறது.
ரஜினியின் ‘பேட்ட’, விஜய்யின் ‘மாஸ்டர்’ தனுஷின் ‘மாறன்’, விக்ரமின் ‘தங்கலான்’ ஆகிய படங்களில் நடித்த மாளவிகா மோகனின் முதல் தெலுங்கு படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.