ஒரு செம்ம ரோபோ காதல்.. ஹாட்ஸ்டாரில் விரைவில் ரிலீஸ்..!
தமிழ் திரை உலகில் ’சிவா மனசுல சக்தி’ ’பாஸ் என்ற பாஸ்கரன்’ ’ஒரு கல் ஒரு கண்ணாடி உள்பட ஒரு சில வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் ராஜேஷ் எம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் வெப் தொடர் ’MY3.
விரைவில் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ள ஒரு செம ரோபோ காதல் கதை அம்சம் கொண்ட இந்த தொடரில் பிக் பாஸ் சீசன் 3 டைட்டில் வின்னர் முகின் ராவ் நாயகனாகவும், ஹன்சிகா நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் ஒரு முக்கிய கேரக்டரில் பாக்யராஜ் மகன் சாந்தனு பாக்யராஜ் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரோபோ காதல் கதையான இந்த தொடர் முழுக்க முழுக்க காமெடி கதை அம்சம் கொண்டது என்றும் இந்த வெப் தொடர் நிச்சயம் ரசிகர்களை கவரும் என்றும் கூறப்படுகிறது. இந்த தொடரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் இந்த போஸ்டர் வைரல் ஆகி வருகிறது.