விஜய்சேதுபதியின் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படம் குறித்த சூப்பர் தகவல்!
தமிழ் திரைப்படங்கள் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் ஹிந்தி திரை உலகிலும் பிஸியாக இருக்கும் நடிகர் விஜய் சேதுபதி என்பது அனைவரும் அறிந்ததே. அவர் தற்போது சுமார் 15 படங்களில் நடித்து வருகிறார் என்பதும் ஒரு சில படங்கள் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் விஜய் சேதுபதி நடித்து வரும் படங்களில் ஒன்று ’காத்துவாக்குல ரெண்டு காதல்’. விஜய் சேதுபதியுடன் நயன்தாரா, சமந்தா நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு இன்று புதுச்சேரியில் தொடங்கி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் ஒரு வாரம் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் இத்துடன் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து விட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதனை அடுத்து போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் தொடங்கி விரைவில் இந்த படம் ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிரது. அனிருத் இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் சிங்கிள் பாடல் ஏற்கனவே வெளியாகி வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.