மாதவனின் அடுத்த படத்தில் இணைந்த ஜெயமோகன்.. இயக்குனர் யார் தெரியுமா?

மாதவனின் அடுத்த படத்தில் இணைந்த ஜெயமோகன்.. இயக்குனர் யார் தெரியுமா?

பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் கடந்த சில ஆண்டுகளாக முன்னணி நடிகர்களின் படங்களுக்கு வசனம் எழுதி வரும் நிலையில் மாதவனின் அடுத்த படத்திற்கும் வசனம் எழுத உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் திரையுலகில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ’2.0’, ‘சர்கார்’, ‘வெந்து தணிந்தது காடு’, ‘பொன்னியின் செல்வன்’ உள்பட பல திரைப்படங்களுக்கு எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுதியுள்ளார். மேலும் அவர் வசனம் எழுதிய ’விடுதலை’ மற்றும் ’இந்தியன் 2’ ஆகிய திரைப்படங்கள் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளன.

இந்த நிலையில் மாதவன் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தை இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்க உள்ளார். ’திருச்சிற்றம்பலம்’ என்ற வெற்றி திரைப்படத்தை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவான ’அரியவன்’ என்ற படம் வரும் மார்ச் 3ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

இந்த நிலையில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில், மாதவன் நடிப்பில் உருவாக இருக்கும் அடுத்த திரைப்படத்தில் ஜெயமோகன் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

LATEST News

Trending News