பாண்டியன் ஸ்டோர்ஸ் முடியப்போகிறதா... நடிகை ஹேமா ராஜ்குமார் கொடுத்த ஹின்ட்...

பாண்டியன் ஸ்டோர்ஸ் முடியப்போகிறதா... நடிகை ஹேமா ராஜ்குமார் கொடுத்த ஹின்ட்...

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது மொத்த குடும்பமும் புது வீட்டில் குடியேறுவது போல காட்சிகள் வர இருக்கிறது. தற்போது கிரஹப்ரவேசத்திற்கு ஏற்பாடுகள் நடப்பது போல் தான் சீரியல் நகர்ந்து கொண்டிருக்கிறது.

வீட்டிற்கு தனலட்சுமி இல்லம் என மூத்த அண்ணியின் பெயர் தான் வைத்து இருக்கின்றனர் என்பதும் ப்ரோமோவில் காட்டப்பட்டு இருந்தது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் முடியப்போகிறதா? நடிகை ஹேமா ராஜ்குமார் கொடுத்த ஹின்ட் | Hema Rajkumar On Pandian Stores Climaxமொத்த குடும்பமும் விரைவில் புது வீட்டுக்கு செல்ல இருக்கும் நிலையில் அதோடு சீரியல் முடிய வாய்ப்பிருப்பதாக தகவல் பரவி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸில் மீனாவாக நடித்து வரும் ஹேமா ராஜ்குமார் இன்ஸ்டாக்ராமில் இது பற்றி பதிவிட்டு இருக்கிறார். "பாண்டியன் ஸ்டோர்ஸ் முடிய போகிறதா?" என அவர் கேள்விக்குறி மட்டும் வைத்து இருக்கிறார்.

அதனால் சீரியல் முடிவது உறுதி என ரசிகர்கள் கூறி வருகின்றனர். அடுத்து இரண்டாம் பாகம் தொடங்க்கிடாதீங்க என்றும் ரசிகர்கள் கேட்டு இருக்கின்றனர். 

LATEST News

Trending News