'இருள் ஆளப்போகிறது.. 'டிமாண்டி காலனி 2' வீடியோ: யார் யார் நடிச்சிருக்காங்க?
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் உருவான ’டிமான்டி காலனி’ என்ற திரைப்படம் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் சற்று முன் இந்த படம் குறித்த வீடியோ வெளியாகி உள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. 'இருள் ஆளப்போகிறது என்ற டைட்டிலுடன் வெளியாகியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் உருவாகி வருவதாக இந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த படத்தில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், ஆன்ட்டி ஜாஸ்கெலனன், டோர்ஜி, அருண் பாண்டியன், ‘குக் வித் கோமாளி’ முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ஆகியோர் நடித்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சாம் சிஎஸ் இசையில், ஹரிஸ் கண்ணன் தீபக் மேனன் ஒளிப்பதிவில், குமரேசன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் இரண்டு நிமிடங்களுக்கு மேல் உள்ள இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.