தொகுப்பாளினி டிடி அணிந்திருக்கும் இந்த புடவையின் விலை எவ்வளவு தெரியுமா? இதோ
சின்னத்திரையில் 20 வருடங்களும் மேலாக தொகுப்பாளினியாக கலக்கியவர் திவ்யதர்ஷினி. இவரை டிடி என செல்லமாக அழைப்பார்கள்.
சமீபத்தில் தொகுப்பாளினி டிடி-யின் சகோதரருக்கு வெளிநாட்டு பெண்ணுடன் கோலாகலமாக திருமணம் நடந்தது. தனது சகோதரரின் திருமணத்திற்காக தேவையான அனைத்து விஷயங்களையும் டிடி தான் பார்த்து பார்த்து செய்துள்ளாராம்.

தனது தம்பியின் திருமணத்திற்காக ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து செய்துவிட்டு, கடைசி Cocktail கொண்டாட்டத்தில் எந்த பரபரப்பும் இல்லாமல் இருந்ததாக பதிவு செய்திருந்தார் டிடி.
இந்த நிலையில், தற்போது டிடி திருமணத்திற்கு அணிந்திருந்த புடவையின் விலை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அவர் அணிந்திருந்த காஞ்சிபுரம் புடவையின் விலை ரூ. 19,500 என கூறப்படுகிறது.
