தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது இறந்த ரசிகர்கள்- வருத்தத்தில் சூர்யா செய்த விஷயம், வீடியோவுடன் இதோ.
நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக முக்கிய இடத்தில் இருப்பவர். சில வருடங்களுக்கு முன் இவரது நடிப்பில் வெளியான சூரரைப் போற்று படத்தின் மூலம் தேசிய விருது எல்லாம் பெற்றிருக்கிறார்.
அப்படத்திற்கு பிறகு சூர்யா படங்கள் எல்லாமே நல்ல ரீச் பெற்று வருகின்றன. நேற்று ஜுலை 23, நடிகர் சூர்யாவின் பிறந்தநாள், ரசிகர்கள் பிரபலங்கள் என அனைவரும் வாழ்த்து கூறி வருகிறார்கள்.
அவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் கங்குவா படத்தின் சில வீடியோக்கள் எல்லாம் வெளியாகி இருந்தது.
ஆந்திராவில் பல்நாடு மாவட்டத்தின் நரசராவ் பேட்டை பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் மற்றும் பி.சாய் இருவரும் சூர்யா பிறந்தநாளை கொண்டாட பேனர் வைக்கும் விழாவில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
அப்போது மின்சாரம் பாய்ந்து இரண்டு ரசிகர்கள் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளனர்.
இந்த சோகமான செய்தி சூர்யாவிற்கு செல்ல அவர் உடனடியாக இறந்த ரசிகர்களின் குடும்பத்தினரிடம் வீடியோ காலில் பேசி ஆறுதல் கூறியுள்ளார்.
Thank you very much @Suriya_offl Garu for responding and being with the family 🥹🙏
— Nellore NTR Fans (@NelloreNTRfc) July 23, 2023
We @tarak9999 Fans always with you 🙏#HappyBirthdaySuriya pic.twitter.com/w61XsSxQWS