பிக் பாஸ் வீட்டில் நடந்த எதிர்பாராத விஷயம்.. பெட்டியை கட்டிய போட்டியாளர்கள்!
கடந்த 5ஆம் தேதி தொடங்கிய பிக் பாஸ் 9 நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 20 போட்டியாளர்கள் களமிறங்கிய நிலையில், நந்தினி என்பவர் முதல் வாரமே தானாக முன்வந்து வீட்டிலிருந்து வெளியேறினார்.
இதன்பின், அதே வாரம் குறைவான வாக்குகளை பெற்ற பிரவீன் காந்தி வெளியேற்றப்பட்டார். இதை தொடர்ந்து அப்சரா எலிமினேஷன் செய்யப்பட்டார். இதை தொடர்ந்து, கடந்த வாரம் ஆதிரை வெளியேறினார்.

இந்நிலையில், இந்த வாரம் பிக் பாஸ் ஒரு புது டாஸ்க் கொடுத்து இருக்கிறார்.
போட்டியாளர்கள் தங்கள் உடை, காலணி உள்ளிட்ட மொத்த பொருட்களையும் கொடுத்துவிட்டு அதை திரும்பி பெற டாஸ்கில் போராட வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
அதை கேட்டு ஷாக் ஆன போட்டியாளர்கள் மொத்த பேரும் பெட்டியில் தங்களது பொருட்களை வைத்து அனுப்பிவிட்டனர். இதோ ப்ரோமோவை பாருங்க,