விஜய்சேதுபதியின் அடுத்த படத்தில் கங்கனா ரனாவத்? இயக்குவது இந்த சூப்பர்ஹிட் பட இயக்குனரா..!

விஜய்சேதுபதியின் அடுத்த படத்தில் கங்கனா ரனாவத்? இயக்குவது இந்த சூப்பர்ஹிட் பட இயக்குனரா..!

விஜய் சேதுபதி நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை சூப்பர் ஹிட் படத்தின் இயக்குனர் ஒருவர் இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. 

தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களான அஹிம்சா என்டர்டைன்மென்ட் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க உள்ளார். இந்த படத்தில் கங்கனா ரனாவத் நாயகியாக நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த படத்தை ’ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’ என்ற மலையாள படத்தை இயக்கிய இயக்குனர் விபின் தாஸ் என்பவர் தான் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. கணவன் மனைவியை அடிக்க கை ஓங்கும்போது மனைவி திருப்பி அடித்தால் எப்படி இருக்கும் என்பதை காமெடியாகவும் கலகலப்பாகவும் ’ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’ படத்தில் கூறியிருந்த இயக்குனர் விபின் தாஸ் விஜய் சேதுபதி, கங்கனா படத்தில் என்ன கதையை தேர்வு செய்திருக்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

LATEST News

Trending News