நீச்சல்குளத்தில் என்ன ஒரு ஜாலி.. மஞ்சிமா மோகனின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!
நடிகை மஞ்சிமா மோகன் திருமணத்திற்கு பின்னர் திரைப்படங்களில் நடிக்காவிட்டாலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கிறார் என்பதும் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் சுமார் 2 மில்லியன் ஃபாலோயர்கள் வைத்திருக்கும் மஞ்சிமா மோகன் அவ்வப்போது புகைப்படங்கள், வீடியோவை பதிவு செய்து வருகிறார் என்பதையும் பார்த்து வருகிறோம்.
குறிப்பாக நேற்று அவர் தலைகீழாக வொர்க் அவுட் செய்த புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார் என்பதும் அதில் அவர் ஸ்லிம்மாக இருப்பதை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்தார்கள் என்பதையும் பார்த்தோம்
இந்த நிலையில் சற்றுமுன் அவர் தனது இன்ஸ்டாகிராமில் நீச்சல் குளத்தில் ஜாலியாக நீச்சல் அடிக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். கடந்த சில வாரங்களாக இன்ஸ்டாகிராமில் பதிவுகள் செய்யாமல் இருந்த மஞ்சிமா மோகன் தற்போது தொடர்ச்சியாக பதிவு செய்து வருவதை அடுத்து அவரது ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர்.
நடிகை மஞ்சிமா மோகன் சமீபத்தில் ஜியோ சினிமாவில் வெளியான ’Boo’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் தற்போது அவர் ஸ்லிம் ஆகிவிட்டதால் மீண்டும் அவர் நாயகி கேரக்டரில் நடிக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.