நான் இன்னும் கர்ப்பம் ஆகல.. திருமணம் பற்றி கேட்டதற்கு டாப்ஸி சொன்ன பதில்..!
ஆடுகளம், ஆரம்பம், காஞ்சனா 2 உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்து இருப்பவர் டாப்ஸி. அவர் தற்போது ஏலியன் என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார். கேம் ஓவர் படம் பிடித்தவர்களுக்கு இந்த படமும் நிச்சயம் பிடிக்கும் என டாப்ஸி கூறி இருக்கிறார்.
மேலும் சமீபத்தில் டாப்ஸி ரசிகர்கள் உடன் இன்ஸ்டாகிராமில் உரையாடினார். அப்போது பல கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
எப்போது திருமணம் செய்ய போகிறீர்கள் என ரசிகர் ஒருவர் கேட்டதற்கு 'நான் இன்னும் கர்ப்பம் ஆகவில்லை. அதனால் திருமணம் இப்போதைக்கு இல்லை. நடக்கும்போது சொல்கிறேன்' என டாப்ஸி கூறி இருக்கிறார்.
பாட்மிண்டன் வீரர் மாத்தியாஸ் போ என்பவரை டாப்ஸி காதலித்து வருவதாக கூறப்படுகிறது. அவர்கள் ஜோடியாக தொடர்ந்து புகைப்படங்களும் வெளியிட்டு வருகின்றனர். தற்போது முதல் முறையாக டாப்ஸி திருமணம் பற்றி பேசி இருக்கும் வீடியோ வைரல் ஆகி வருகிறது.
ஆலியா பட் - ரன்பீர் கபூர் திருமணத்தை கலாய்க்கும் வகையில் தான் டாப்ஸி இப்படி பேசி இருக்கிறார் என நெட்டிசன்கள் தற்போது கூறி வருகின்றனர்.