புதிய சாதனை படைத்த லியோ 'நா ரெடி தான் வரவா' பாடல்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் லியோ. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத், மிஸ்கின், கவுதம் மேனன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
இந்த ஆண்டு தமிழ் சினிமா ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்களில் லியோவும் ஒன்று. இப்படத்திலிருந்து முதல் பாடல் 'நா ரெடி தான் வரவா' கடந்த ஜூன் 22ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாள் அன்று வெளிவந்தது.
ரசிகர்கள் இப்பாடலை கொண்டாடினாலும், சிலர் இப்படத்திற்கு தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தனர். விஜய் சிகரெட் பிடிக்கும் காட்சிகள். போதை பொருள் குறித்து இடம்பெறும் விஷயம் என பெரும் சர்ச்சை இன்று வரை பேசப்பட்டு வருகிறது.
எதிர்ப்பு ஒரு பக்கம் இருந்தாலும், Youtubeல் தொடர்ந்து பல சாதனைகளை லியோ திரைப்படம் செய்து வருகிறது. இதுவரை 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்து லிரிகள் வீடியோ பாடல் தரவரிசையில் புதிய சாதனையை 'நா ரெடி தான் வரவா' பாடல் படைத்துள்ளது. இதை சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.