கண்ணீருடன் வனிதா வெளியிட்ட பதிவு... 10 வருடமாகியும் மறக்கமுடியாத சோகம்...

கண்ணீருடன் வனிதா வெளியிட்ட பதிவு... 10 வருடமாகியும் மறக்கமுடியாத சோகம்...

நடிகை வனிதா மறைந்த தனது தாய் மஞ்சுளாவின் நினைவாக வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு வைரலாகி வருகின்றது.

தமிழ் திரையுலகில், மூன்று தலைமுறைகளாக நடித்து கொண்டிருக்கும் நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளா தம்பதிகளின் மூத்தமகள் தான் நடிகை வனிதா.

குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்த இவர், பின்பு விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

பின்பு ஆகாஷ் என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு மகன், இரண்டு மகள் உள்ள நிலையில் அவரைப் பிரிந்தார். இதில் மகன் ஆகாஷிடமும், ஒரு மகள் வனிதாவுடனும், மற்றொரு மகள் அவரது முன்னாள் கணவருடனனும் இருந்து வருகின்றனர்.

கண்ணீருடன் வனிதா வெளியிட்ட பதிவு... 10 வருடமாகியும் மறக்கமுடியாத சோகம் | Vanitha Emotional Instagram Status Her Motherநடிகர் விஜயகுமாரின் மனைவியும், வனிதாவின் தாயுமான மஞ்சுளா பல நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர். இவர் தற்போது உயிருடன் இல்லையென்றாலும் அவ்வப்போது அவரது நினைவுகள் இணையத்தில் வலம் வருகின்றன.

மறைந்த நடிகை மஞ்சுளாவின் பிறந்தநாள் சமீபத்தில் நினைவு கூறப்பட்ட நிலையில், நடிகை வனிதா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்ட பதிவில், தனது தாய்க்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிவிட்டு, 10 ஆண்டுகள் ஆகியும் உன்னை பற்றி நினைப்பதை நிறுத்தாமல் இருக்கமுடியவில்லை... நீ கற்றுக்கொடுத்த அனைத்தையும் ஞாபகம் வைத்துள்ளேன் என்றும், உன்னைப் போலவே வளர்கிறேன் என்றும் தனது போன் ஸ்கிரீன் சேவரில் நீங்களே இருக்கின்றீர்கள்... எப்பொழுதும் என்னை சுற்றி இருக்கும் உங்களை ஒரு நாள் சந்திக்கிறேன்.... என்று வனிதா உருக்கமாக தனது பதிவினை வெளியிட்டுள்ளார்.

கண்ணீருடன் வனிதா வெளியிட்ட பதிவு... 10 வருடமாகியும் மறக்கமுடியாத சோகம் | Vanitha Emotional Instagram Status Her Mother

LATEST News

Trending News