உறவினர்கள் சொத்தை ஆட்டைய போட்ட விக்னேஷ் சிவன் தந்தை; க்ரிமினல் நடவடிக்கைக்காக நயன் - விக்கி மீது புகார்..!

உறவினர்கள் சொத்தை ஆட்டைய போட்ட விக்னேஷ் சிவன் தந்தை; க்ரிமினல் நடவடிக்கைக்காக நயன் - விக்கி மீது புகார்..!

நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவனின் தந்தை - சிவக்கொழுந்து உறவினர்களின் சொத்தை ஆட்டைய போட்டதாக டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் தான் நடிகை நயன்தாரா. 40 வயதை எட்டும் நயன்தாராவிற்கு இன்றும் கோலிவுட்டில் மார்க்கட் இருக்கின்றது.

மேலும் எந்த படமாக இருந்தாலும் நயன்தாராவின் மனதிற்கு எட்டிய திரைப்படங்களில் மாத்திரம் தான் கமிட்டாகுவாராம்.

அந்த வகையில், “நானும் ரவுடிதான்” படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளார். அந்த படத்தின் இயக்குநரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

உறவினர்கள் சொத்தை ஆட்டைய போட்ட விக்னேஷ் சிவன் தந்தை; க்ரிமினல் நடவடிக்கைக்காக நயன் - விக்கி மீது புகார்..! | Vignesh Shivan Father Cheating Relatives Propertyஇவர்களுக்கு தற்போது அழகிய இரண்டு ஆண் குழந்தைகளும் இருக்கிறார்கள். மேலும் குழந்தைகளை கவனித்து கொள்ள வேண்டும் என்பதால் நயன்தாரா சினிமா பக்கம் கவனம் செலுத்தாமல் அவரின் பிஸ்னசில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில், நயன்தாராவின் மாமனாரும், விக்னேஷ் சிவனின் தந்தையுமான “சிவக்கொழுந்து” மீது லால்குடி டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.

அதில் அவர்களுக்கே தெரியாமல் அவர்களின் சொத்துக்களை அபகரித்ததாக அதற்கான ஆதாரங்களை கொடுத்துள்ளார்கள்.

உறவினர்கள் சொத்தை ஆட்டைய போட்ட விக்னேஷ் சிவன் தந்தை; க்ரிமினல் நடவடிக்கைக்காக நயன் - விக்கி மீது புகார்..! | Vignesh Shivan Father Cheating Relatives Propertyஇந்த புகாரின் அடிப்படையில், தாய் மீனா குமாரி, சகோதரி ஐஸ்வர்யா, விக்னேஷ் சிவன், நயன்தாரா ஆகியோரை மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சொல்லப்பட்டுள்ளதாம்.

இதனை தொடர்ந்து போலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள். விரைவில் இதற்கான தீர்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.     

 

LATEST News

Trending News