தனுஷின் 'D50' படத்தில் நடிப்பதை உறுதி செய்த பிரபல நடிகர்..!
தனுஷ் நடித்த இயக்கும் ’D50’ படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் இதனை அடுத்து தனுஷ் ரசிகர்கள் உற்சாகமாகினர் என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த தகவல்கள் ஏற்கனவே கசிந்த நிலையில் தற்போது இளம் நடிகர் இந்த படத்தில் நடிப்பதை உறுதி செய்யும் வகையில் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு செய்துள்ளார்.
தனுஷின் ’D50’ படத்தில் காளிதாஸ் ஜெயராம் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில் சற்றுமுன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’புதிய படம் தொடக்கம்’ என்று பதிவு செய்து பின்னணியில் தனுஷ் நடித்த ’புதுப்பேட்டை’ படத்தின் பாடலை பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து தனுஷின் ’D50’ படத்தில் இவர் நடிக்க உள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
’ராயன்’ என்று இந்த படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா, சந்திப் கிஷான் , துஷாரா விஜயன் உள்ளிட்ட சிலர் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. வடசென்னை பின்னணியாக கொண்டு இந்த படம் உருவாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.