விபத்தில் சிக்கிய ஷாருக் கான்! அமெரிக்காவில் சர்ஜரி.. ரசிகர்கள் அதிர்ச்சி...
நடிகர் ஷாருக் கான் சினிமா துறையில் 31 வருடங்களுக்கும் மேலாக இருந்து வருகிறார். அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது.
அவரது முந்தைய படமான பதான் 1000 கோடி ரூபாய்க்கும் அதிகம் வசூலித்து சாதனை படைத்தது. அதனை தொடர்ந்து தற்போது அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தில் நடிக்கிறார். அது மட்டுமின்றி ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் Dunki என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் ஷாருக் அமெரிக்காவில் ஷூட்டிங்கில் கலந்து கொண்ட போது விபத்தில் சிக்கி இருக்கிறார். அவரது மூக்கில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டி இருக்கிறது.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு சர்ஜரி செய்யப்பட்டு இருக்கிறது. தற்போது ஷாருக் இந்தியாவுக்கு மீண்டும் திரும்பி வந்திருகிறார். அவரது மூக்கில் bandage இருப்பதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி ஆகி இருக்கின்றனர்.
இருப்பினும் விபத்து பற்றி ஷாருக் தரப்பு எந்த தகவலையும் வெளியிடவில்லை.
