வெறித்தனமாக தயாராகி வரும் கங்குவா படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்...

வெறித்தனமாக தயாராகி வரும் கங்குவா படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்...

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் கங்குவா. இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து முதல் முறையாக பாலிவுட் நடிகை திஷா பாட்னி நடிக்கிறார். மேலும், இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

இந்நிலையில், ஆவலுடன் இப்படத்தை திரையில் காண காத்திருக்கும் ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கொடைக்கானலில் நடைபெற்று வருகிறதாம்.

வெறித்தனமாக தயாராகி வரும் கங்குவா படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் | Kanguva Movie Latest Update

இன்னும் 20 நாட்கள் தொடர்ந்து இந்த படப்பிடிப்பு நடக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. வருகிற ஜூலை 23ஆம் தேதி சூர்யாவின் பிறந்தநாள் அன்று இப்படத்தின் ப்ரோமோ வீடியோ பிரம்மாண்டமாக வெளியாகும் என தெரிவிக்கின்றனர்.

மேலும் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் இப்படம் 3D மற்றும் 2Dல் வெளியாகும் என கூறப்படுகிறது. கங்குவா படத்தை முடித்த கையோடு நடிகர் சூர்யா சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. 

LATEST News

Trending News