ஆயுத பூஜைக்கு சோலோவாக ரிலீஸ் ஆகும் 'லியோ' : முக்கிய நடிகரின் படம் பின்வாங்குவதாக தகவல்..!

ஆயுத பூஜைக்கு சோலோவாக ரிலீஸ் ஆகும் 'லியோ' : முக்கிய நடிகரின் படம் பின்வாங்குவதாக தகவல்..!

தளபதி விஜய் நடித்து வரும் ‘லியோ’ திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 19ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதே தேதியில் ரிலீஸ் ஆக திட்டமிடப்பட்டிருந்த திரைப்படம் ஒன்று தள்ளி வைக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’. இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாதத்திற்குள் முடிவடைந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இன்னொரு பக்கம் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருவதாகவும் இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் கேரளா ரிலீஸ் உரிமையை கோகுலம் என்ற நிறுவனம் பெற்றுள்ளதை அடுத்து கேரளாவில் அதிக திரையரங்குகளில் ‘லியோ’ படத்தை வெளியிட அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில் அக்டோபர் 19ஆம் தேதி பிரித்விராஜ் சுகுமாரன், அமலாபால் நடிப்பில் உருவான ’ஆடு ஜீவிதம்’ என்ற படமும் ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது வந்துள்ள தகவலின்படி ‘லியோ’ திரைப்படம் வெளியாக இருப்பதை அடுத்து ’ஆடு ஜீவிதம்’ திரைப்படம் இரண்டு வாரங்கள் ரிலீஸ் தள்ளி போகும் என்று தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

எனவே தளபதி விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் கேரளாவில் உள்ள நிலையில் அம்மாநிலத்தில் ‘லியோ’ படம் சோலோவாக ரிலீஸ் ஆக இருப்பதாக கூறப்படுகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES