நடிகை வரலட்சுமி சரத்குமார் Teenage வயதில் எப்படி உள்ளார் பாருங்க- இதுவரை பார்க்காத போட்டோ
நடிகர் சிம்பு நடித்த போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி சரத்குமார்.
அப்படத்திற்கு பிறகு தமிழில் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் கன்னட திரைப்படங்களில் பிஸியாக நடித்து வந்தார். பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு பாலா இயக்கிய நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான தாரை தப்பட்டை படத்தில் முக்கிய நாயகியாக நடித்திருப்பார்.
நாயகியாக களமிறங்கிய வரலட்சுமி கொஞ்சம் தனது டிராக்கை மாற்றி சண்டக்கோழி 2, சர்கார், மாரி 2 உள்ளிட்ட படங்களில் கலக்கல் வில்லியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார்.
இடையில் உடல் எடையை சுத்தமாக குறைத்து தெலுங்கு மற்றும் தமிழில் அதிக படங்கள் நடித்துவரும் வரலட்சுமி எப்போதும் இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருப்பார்.
அண்மையில் தனது அப்பா சரத்குமார் மற்றும் தங்கையுடன் Teenage வயதில் எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். இதுவரை யாரும் பார்த்திராத அந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.