தமன்னாவின் காதலர் சொத்து மதிப்பு இவ்வளவுதானா? தமன்னாவை விட மிக குறைவு..!
நடிகை தமன்னா தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். மேலும் அவர் தற்போது ஹிந்தி படங்கள் மற்றும் வெப் சீரிஸிலும் தற்போது கவனம் செலுத்தி வருகிறார்.
அவர் நடித்து இருக்கும் Lust Stories 2 வெப் சீரிஸில் அவரது காதலர் விஜய் வர்மா உடன் மிக நெருக்கமான காட்சியில் நடித்து இருப்பதும் சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமன்னா மற்றும் விஜய் வர்மா இருவரும் நீண்ட காலமாக காதலித்து வருவதாக செய்திகள் வந்துகொண்டிருக்கிறது. அதை உறுதிப்படுத்தும் விதமாக அவர்களும் எப்போதும் ஜோடியாகவே சுற்றுகின்றனர்.
நடிகை தமன்னா சினிமாவில் நடித்து சுமார் 110 கோடி ருபாய் அளவுக்கு சொத்து சேர்ந்து வைத்திருக்கிறாராம். அதே நேரத்தில் அவரது காதலர் விஜய் வர்மாவின் சொத்து வெறும் 17 கோடி தான் என சொல்லப்படுகிறது.
காதலுக்கு மரியாதைகொடுத்து, சொத்துக்கு ஆசைப்படாத தமன்னாவை தற்போது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
