மண்ணாங்கட்டி படத்தில் நடிகை நயன்தாரா..
தமிழ் சினிமாவில் டாப்பில் இருக்கும் நடிகைகளில் ஒருவர் நயன்தாரா. நேற்று தான் தன்னுடைய முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடினார்.

அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ கூட ரசிகர்கள் மத்தியில் வைரலானது. நயன்தாரா நடிப்பில் தற்போது ஜவான், இறைவன் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.
இந்நிலையில், இப்படங்களை தவிர்த்து நயன்தாரா நடித்து வரும் புதிய படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. நயன்தாரா புதிதாக நடித்து வரும் இப்படத்திற்கு "மண்ணாங்கட்டி" என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாம்.
இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறார்களாம். நடிகை நயன்தாரா நடிக்கும் படத்திற்கு இப்படியொரு தலைப்பா என கேள்வி எழுந்தாலும், கதைக்கான தலைப்பாக தான் இது இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
பொறுத்திருந்து பார்ப்போம் இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்புடன் போஸ்டர் எப்போது வெளியாகும் என்று.