அஜித்தை தொடர்ந்து மேலும் ஒரு நடிகருக்கு வில்லனாகும் அர்ஜுன் தாஸ்.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு
கைதி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் அர்ஜுன் தாஸ். இதன்பின் விஜய்யுடன் இணைந்து மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். மேலும் விக்ரம் படத்தில் இறுதி காட்சியிலும் தோன்றினார்.
தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இளம் நடிகர்களில் ஒருவராக இருக்கும் அர்ஜுன் தாஸ் அடுத்ததாக அஜித்துக்கு வில்லனாக விடாமுயற்சி படத்தில் நடிக்கிறார் என தகவல் வெளிவந்தது. ஆனால், இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் வெளிவரவில்லை.
இந்நிலையில், தெலுங்கு திரையுலகின் பவர் ஸ்டார் பவன் கல்யாணின் OG படத்தில் அர்ஜுன் தாஸ் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.