முதலமைச்சர் ஆகும் நடிகர் ஜீவா! வைரலாகும் அப்டேட்...

முதலமைச்சர் ஆகும் நடிகர் ஜீவா! வைரலாகும் அப்டேட்...

முன்னாள் ஆந்திர முதல்வர் YS ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாறு Yatra என்ற பெயரில் கடந்த 2019ல் வெளியானது. அந்த படத்தை மஹி ராகவ் இயக்கி இருந்தார்.

தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. முதல் பாகத்தில் YSR ஆக நடித்த மம்மூட்டி தான் இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார். அதே நேரத்தில் அவரது மகன், தற்போதைய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியாக நடிக்க போவது யார் என்கிற கேள்வி எழுந்தது.

தற்போது தமிழ் நடிகர் ஜீவா தான் ஜெகன் மோகன் ரெட்டியாக நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார் என அறிவித்து இருக்கின்றனர்.

YSR இறந்த காலகட்டத்தில் இருந்து Yatra 2ம் பாகத்தின் கதை தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான முதற்கட்ட பணிகளில் இயக்குனர் தற்போது ஈடுபட்டு வருகிறாராம். முதலமைச்சர் ஆகும் நடிகர் ஜீவா! வைரலாகும் அப்டேட் | Jiiva As Jagan Mohan Reddy In Yatra 2

LATEST News

Trending News