விவாகரத்து இல்லை.. ஆனால் இந்த ஒரு விஷயத்தில் மட்டும் சண்டை: மஹாலக்ஷ்மி பற்றி ரவீந்தர்
சீரியல் நடிகை மஹாலக்ஷ்மி மற்றும் தயாரிப்பாளர் ரவீந்தர் ஆகியோர் திருமணம் நடந்தபோது அது இந்திய அளவில் பேசப்பட்டது. அவர்கள் திருமண போட்டோ அதிகம் வைரல் ஆனது.
மேலும் சமீபத்தில் ரவீந்தர் தனியாக இன்ஸ்டாகிராமில் ஒரு போட்டோ வெளியிட, அவர்களுக்கு விவாகரத்து ஆகிவிட்டது என தகவல் பரவியது. ஆனால் அது வதந்தி என விளக்கம் கொடுத்தனர்.
இந்நிலையில் ரவீந்தர் ஒரு சேனலுக்கு அளித்திருக்கும் பேட்டியில் மகா உடன் வரும் சண்டை பற்றி பேசி இருக்கிறார்.
'மஹா ரொம்ப பொஸசிவ். நான் அவளது பிரெண்ட்ஸ் யாருடன் பேசினால் கூட கோபப்படுவார். இந்த ஒரு விஷயத்தால் மட்டும் தான் சண்டை. மற்ற சண்டைகள் அப்படி வந்து இப்படி போய்டும்' என ரவீந்தர் கூறி இருக்கிறார்.