விஜய்யை தொடர்ந்து மூன்று முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகும் திரிஷா.. கைவசம் இத்தனை படங்களா..!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷாவின் நடிப்பில் கடைசியாக பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வெளிவந்தது. அடுத்ததாக விஜய்யுடன் இணைந்து லியோ படத்தில் நடித்து வருகிறார்.
இதை தொடர்ந்து அஜித்தின் விடாமுயற்சி படத்தில் கதாநாயகியாக நடிக்க திரிஷாவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏறக்குறைய விடாமுயற்சி படத்தில் திரிஷா நடிப்பது உறுதி என கூறப்படுகிறது.

மேலும், தனுஷின் 50வது படத்திலும் கதாநாயகியாக திரிஷா நடிக்கவுள்ளாராம். ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை.

அதே போல் மோகன்லால் நடிக்கும் ராம் படத்திலும் திரிஷா தான் ஹீரோயின் என கூறப்படுகிறது. இதன்முலம் விஜய், அஜித், தனுஷ், மோகன்லால் என தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்களின் படங்களை கைவசம் வைத்துள்ளார் திரிஷா.
