அடுத்த வாரம் திருமணம்.. இன்று விபத்தில் சிக்கிய ஹீரோ! மருத்துவமனையில் அனுமதி

அடுத்த வாரம் திருமணம்.. இன்று விபத்தில் சிக்கிய ஹீரோ! மருத்துவமனையில் அனுமதி

தெலுங்கு சினிமாவில் முக்கிய ஹீரோவாக இருந்து வருபவர் சர்வானந்த். அவருக்கு அடுத்த வாரம் திருமணம் நடைபெற இருக்கிறது. தமிழில் எங்கேயும் எப்போதும் உள்ளிட்ட ப்டங்களில் நடித்திருக்கிறார் அவர் .

ஐடி துறையில் பணியாற்றி வரும் ரக்ஷிதா ஷெட்டி என்பவரை தான் சர்வானந்த் திருமணம் செய்கிறார். வரும் ஜூன் 3ம் தேதி ஜெய்ப்பூரில் இருக்கும் லீலா பேலஸில் நடைபெற இருக்கிறது.

அடுத்த வாரம் திருமணம்.. இன்று விபத்தில் சிக்கிய ஹீரோ! மருத்துவமனையில் அனுமதி | Sharwanand Car Met With Accident

திருமணத்திற்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது சர்வானந்த் கார் விபத்தில் சிக்கி இருக்கிறார்.

சர்வானந்த் பயணித்த கார் அதிகாலை 2 மணிக்கு பிலிம் நகர் பகுதியில் சாலை நடுவில் இருக்கும் தடுப்பில் மோதி விபத்து ஏற்பட்டு இருக்கிறது.

காரில் இருந்த சர்வானந்தை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இருக்கின்றனர். போலீசாரும் விபத்து நடந்த இடத்திற்கு வந்திருக்கின்றனர்.

சர்வானந்த்துக்கு பெரிதாக எந்த காயமும் ஏற்படவில்லை, நலமாக தான் இருக்கிறார் என தற்போது தெரிவித்து இருக்கின்றனர்.   

LATEST News

Trending News

HOT GALLERIES