அப்போ! கல்யாணமான பையனை லவ் பண்ணி இருக்க? தோழிகளை கலாய்த்த ஐஸ்வர்யா ராஜேஷ்!
ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ’தீராக்காதல்’ என்ற திரைப்படம் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த படத்தை பார்த்தவர்கள் படம் சூப்பராக இருக்கிறது என்று கருத்து தெரிவித்து வருவதால் இந்த படம் ஐஸ்வர்யா ராஜேஷின் மற்றொரு வெற்றி படமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
இந்த நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் தனது தோழிகளிடம் இந்த படம் எப்படி இருக்கிறது என்று கேட்ட வீடியோ தற்போது வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அப்போது தோழி ஒருவரிடம் ’உங்களுக்கு எப்போது பிரேக்கப் ஆனது? என்று கேட்டபோது ’இரண்டு வருடங்களுக்கு முன் பிரேக்கப் ஆனது என்றும் அவருடைய நினைவுகள் இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.
அப்போது சம்யுக்தா, ‘அப்போ கல்யாணம் ஆன பையனை லவ் பண்ணி இருக்க’ என்று கூற அனைவரும் சிரித்துக் கொண்டிருக்கும் போது ஐஸ்வர்யா ராஜேஷம் தோழிகளை கலாய்த்தார். அதன் பிறகு ’தீராக்காதல்’ படம் குறித்த தனது கருத்தை தோழிகள் தெரிவித்தனர். இந்த உரையாடலின் முழு வீடியோ இதோ:
ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்வேதா உள்பட பலர் நடிப்பில் உருவான இந்த படத்தை ரோஹின் வெங்கடேசன் இயக்கி உள்ளார். சித்து குமார் இசையில் ரவிவர்மன் நீலமேகம் ஒளிப்பதிவில் பிரசன்னா படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் தயாரிப்பில் உருவாகிய இந்த படம் காதலர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.