த்ரிஷாவின் பிறந்த நாள் தான் எனது மகனுக்கும் பிறந்த நாள்: பிரபல நடிகையின் வைரல் பதிவு!

த்ரிஷாவின் பிறந்த நாள் தான் எனது மகனுக்கும் பிறந்த நாள்: பிரபல நடிகையின் வைரல் பதிவு!

த்ரிஷாவின் பிறந்தநாள் தான் எனது மகனின் பிறந்த நாள் என பிரபல நடிகை ஒருவர் தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களுடன் பதிவு செய்திருப்பது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

நடிகை த்ரிஷா சமீபத்தில் தனது 40வது பிறந்தநாளை கொண்டாடினார் என்பதும் அவருக்கு தமிழ் திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள் என்பதும் தெரிந்ததே. மேலும் அவர் தனது நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ இணையதளங்களில் வைரலானது.

இந்த நிலையில் த்ரிஷாவின் பிறந்த நாள் தான் எனது மகனின் பிறந்த நாள் என்று நடிகை மியா ஜார்ஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார் அதில் அவர் கூறியதாவது: இன்றைய நாள் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல் நாள், காரணம் இன்று த்ரிஷாவின் பிறந்தநாள் மட்டுமின்றி என் மகனுக்கும் இன்று தான் பிறந்தநாள், இருவருக்கும் நான் ஒன்றாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்களுடன் பணியாற்றியது எனக்கு மிகவும் அற்புதமான அனுபவமாக இருந்தது. உங்களிடமிருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன். உங்களை நான் நீண்ட நாள் நினைவில் வைத்துக் கொள்ளும் அளவுக்கு பல நினைவுகளை நான் சேமித்து வைத்துள்ளேன்’ என்று கூறியுள்ளார். மியா ஜார்ஜ் தனது கணவர் மற்றும் குடும்பத்துடன் த்ரிஷாவை சந்தித்த புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

நடிகை த்ரிஷா நடிப்பில் உருவாகி வரும் ’தி ரோடு’ என்ற படத்தில் த்ரிஷாவுடன் மியா ஜார்ஜ் இணைந்து நடித்துள்ளார் என்பதும் இந்த படத்தின் டிரைலர் வீடியோ சமீபத்தில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News