அஜித்தின் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு மொத்தம் இத்தனை நாட்கள் தானா?

அஜித்தின் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு மொத்தம் இத்தனை நாட்கள் தானா?

சினிமா-தனது கனவு என இரண்டிலும் சரிசமமாக பயணித்து வருபவர் அஜித். ஒரு படம் நடித்து முடித்து விட்டாலோ அல்லது இடைவேளை விடப்பட்டாலோ உடனே பைக் டூர் சென்றுவிடுகிறார்.

அப்படி அவர் பயணிக்கும் வழியில் ரசிகர்களுடனும் புகைப்படங்கள் எடுத்து வருகிறார். வலிமை படத்தை முடித்த கையோடு அஜித் பைக் டூர் ஆரம்பித்துவிட்டார், கடந்த சில நாட்களாகவே அவர் நேபாளத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது.

அங்கு ரசிகர்களுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகிய வண்ணம் உள்ளது.

இந்த நேரத்தில் தான் அஜித்தின் புதிய படத்திற்கு விடாமுயற்சி என பெயர் வைத்திருப்பதாக அவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக மொத்த தகவலும் வெளியானது. மகிழ்திருமேனி இயக்க லைகா நிறுவனம் படத்தை தயாரிக்க இருக்கிறார்களாம்.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு மே 3வது வாரத்தில் தொடங்கும் என்றும் 70 நாட்களில் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க இயக்க பிளான் போட்டிருக்க அஜித் 40 நாள் கால்ஷீட் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விரைவில் இப்படத்தில் பணியாற்ற இருக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்து தகவல் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

LATEST News

Trending News