நயன்தாரா படத்திற்கு இசையமைப்பாளராகும் பின்னணி பாடகி..

நயன்தாரா படத்திற்கு இசையமைப்பாளராகும் பின்னணி பாடகி..

 நயன்தாரா நடிப்பில் அடுத்ததாக உருவாகிவரும் திரைப்படம் டெஸ்ட். இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் YNOT ஸ்டூடியோஸ் சஷிகாந்த் இயக்குகிறார்.

இதன்முலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அவர் அறிமுகமாகவுள்ளார். இப்படத்தில் மாதவன், சித்தார்த் உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் இசையமைப்பாளர் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

அதன்படி, இப்படத்திற்கு பிரபல பின்னணி பாடகி ஷக்தி ஸ்ரீ கோபாலன் தான் இசையமைக்கவுள்ளார். இதன்முலம் பின்னணி பாடகியாக வலம் வந்த ஷக்தி ஸ்ரீ கோபாலன் இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ளார்.

இவர் குரலில் சமீபத்தில் வெளிவந்த அக நக பாடல் மாபெரும் அளவில் வரவேற்பை பெற்றது.

மேலும் காதல் கண்கட்டுதே, நெஞ்சுக்குள்ளே, இமையே இமையே என ரசிகர்கள் மனதை கவர்ந்த பல பாடல்களை இவர் தான் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News