‘ஐஸ் பாத்’ எடுக்கும் சமந்தா.

‘ஐஸ் பாத்’ எடுக்கும் சமந்தா.

மயோசிடிஸ் எனும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா, அதை பற்றி கவலைப்படாமல் அர்ப்பணிப்புடன் ஆக்ஷன் காட்சிகளில் நடித்து வருகிறார்.சிட்டாடல் ஆங்கில வெப்தொடரின் இந்தி ரீமேக்கில் சமந்தா நடிக்கிறார். அந்த தொடருக்காக கடுமையான சண்டை காட்சிகளில் அவர் டூப் போடாமல் நடிக்கிறார்.

கடுமையான ஒர்க்அவுட், ஆக்ஷன் காட்சிகளில் நடிப்பதை அடுத்து ஐஸ் பாத் எடுத்திருக்கிறார் சமந்தா. ஒரு பை நிறைய ஐஸ் கட்டிகளை போட்டு அதில் அமர்ந்திருக்கிறார். அது தசைகள் வீங்காமல் இருக்க உதவும். தான் ஐஸ் பாத் எடுக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு ‘டார்ச்சர் டைம்’ என தெரிவித்துள்ளார்.

உடம்புக்கு முடியாத நேரத்தில் சமந்தா இந்த அளவுக்கு ரிஸ்க் எடுப்பதை பார்த்து அனைவரும் வியக்கிறார்கள். ‘ஒரு கதாபாத்திரத்திற்காக எதையும் செய்யத் துணிந்துவிட்டார். நடிகை என்றால் இப்படி அல்லவா இருக்க வேண்டும்’ என ரசிகர்களிடமிருந்து பாராட்டு குவிகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES