பெற்றோரின் திருமண நாள்.. அம்மாவுடன் நடிகர் விஜய் - வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ...

பெற்றோரின் திருமண நாள்.. அம்மாவுடன் நடிகர் விஜய் - வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ...

தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த வாரிசு படம் பொங்கலை முன்னிட்டு வெளியான வாரிசு படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியில் வெற்றிப் படமாக அமைந்ததாக கூறப்படுகிறது.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்யின் பேச்சு படத்துக்கு பெரிதும் பக்கபலமாக அமைந்தது.

இதன் ஒரு பகுதியாக இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட தனது அப்பா - அம்மாவை விஜய் கண்டுகொள்ளவில்லை என்ற சர்ச்சை எழுந்தது.

இந்த நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் இதுகுறித்து விளக்கமளித்தார்.

அவர் பேசியதாவது, நாங்கள் வாரிசு இசை வெளியீட்டு விழாவில் விருந்தினர்களாக தான் கலந்துகொண்டோம்.

அங்கே ரசிகர்களை விஜய் திருப்திபடுத்த வேண்டும். அங்கே எங்களை கவனிக்க வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று பேசியிருந்தார்.

இந்த நிலையில் விஜய் தனது அம்மாவுடன் இருக்கும் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தனது பெற்றோரின் 50வது திருமண நாள் விழாவை கொண்டாடும் விதமாக  விஜய் அவர்களது வீட்டுக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES