'தங்கலான்' படத்தின் சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு.. ரசிகர்கள் கொண்டாட்டம்..!

'தங்கலான்' படத்தின் சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு.. ரசிகர்கள் கொண்டாட்டம்..!

இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் 'தங்கலான்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது என்பதை பார்த்தோம். குறிப்பாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கேஜிஎப் என்று கூறப்படும் கோலார் தங்க வயலில் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றது என்பதும் அது குறித்த புகைப்படங்கள் அவ்வப்போது வெளியானது என்பது தெரிந்தது

இந்த நிலையில் கோலார் தங்க வயலில் நடைபெற்ற படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்ததோடு,அது குறித்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ள நிலையில் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இன்னும் ஒரு சில வாரங்களில் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவுக்கு வரும் என்றும் இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளை பார்த்த போது உலக தரத்தில் படம் வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த ஆண்டு இறுதியில் இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ள நிலையில் விரைவில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளையும் தொடங்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்து வரும் நிலையில் இந்த படத்தின் இரண்டு பாடல்களின் ஒலிப்பதிவு முடிந்துவிட்டதாகவும், இதுவரை நான் முயற்சி செய்யாத தனித்துவமான ஒரு சர்வதேச தரத்தில் பாடல்களை உருவாக்கி உள்ளேன் என்று சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

LATEST News

Trending News