'இந்தியன் 2' அடுத்தகட்ட படப்பிடிப்பு நடக்கும் நாடு இதுதான்: கமல் வெளியிட்ட மாஸ் புகைப்படம்..!

'இந்தியன் 2' அடுத்தகட்ட படப்பிடிப்பு நடக்கும் நாடு இதுதான்: கமல் வெளியிட்ட மாஸ் புகைப்படம்..!

கடந்த சில மாதங்களாக ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இதில் உலக நாயகன் கமல்ஹாசன் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டிருக்கும் நிலையில் படப்பிடிப்பை இயக்குனர் ஷங்கர் விறுவிறுப்பாக நடத்தி வருகிறார் என்பதையும் பார்த்து வந்தோம்.

இந்த நிலையில் ’இந்தியன் 2’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் நடைபெறவிருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் சற்றுமுன் கமல்ஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’இந்தியன் 2’ படப்பிடிப்பிற்காக தைவான் சென்றுள்ளதாக அறிவித்துள்ளார்.

மேலும் இது குறித்த ஒரு புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. தைவான் படப்பிடிப்பை அடுத்து மேலும் ஒரு படப்பிடிப்புடன் ’இந்தியன் 2’ படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பு முடிந்து விடும் என்றும் படக்குழுவினர் களிடமிருந்து செய்திகள் கசிந்துள்ளன.,

கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத்தி சிங், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், ஜெயபிரகாஷ், குரு சோமசுந்தரம், வெண்ணிலா கிஷோர், ஜார்ஜ் மரியான், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்த ‘இந்தியன் 2’ படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ரத்னவேலு, ரவிவர்மன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES