யாரிடமும் கெஞ்ச மாட்டேன்: சம்பள விவகாரம் குறித்து சமந்தா..!
ஹீரோவுக்கு சமமான சம்பளம் வேண்டும் என்று எந்த தயாரிப்பாளரிடம் நான் கெஞ்ச மாட்டேன் என நடிகை சமந்தா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
திரையுலகில் ஆரம்ப காலத்தில் இருந்து ஹீரோவுக்கு ஒரு சம்பளம் ஹீரோயினுக்கு ஒரு சம்பளம் என்று பாகுபாடு காட்டி தான் சம்பளம் கொடுக்கப்படுவதாக பல நாயகிகள் தங்களது அதிருப்தியை தெரிவித்துள்ளனர். ஹீரோவுக்கு சமமாக தாங்களும் நடிப்பதால் தங்களுக்கும் ஹீரோவுக்கு சமமான சம்பளம் கொடுக்க வேண்டும் என்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த சமந்தா ’ஹீரோ ஹீரோயின் ஆகிய இருவருக்கும் சமமான சம்பளம் கொடுக்க வேண்டும் என்பதற்காக நானும் போராடுவேன். ஆனால் என் கடினமான உழைப்பை பார்த்து, என்னுடைய படங்கள் அடையும் வெற்றியை பார்த்து, உங்களுக்கு அதிக சம்பளம் கொடுக்கிறோம் என்று தயாரிப்பாளர்கள் சிலர் முன்வந்து அதிக சம்பளம் கொடுக்கின்றனர். ஆனால் நான் ஹீரோவுக்கு கொடுக்கும் சம்பளத்தை எனக்கும் கொடுங்கள் என்று யாரிடமும் கெஞ்ச மாட்டேன்' என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் சமந்தா நடித்த ’’சாகுந்தலம்’’ என்ற திரைப்படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்திற்காக சமந்தா முழு வீச்சில் புரமோஷன் செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.